மெட்டல் விசில் செயினுக்கு பதில் விசில் கார்டு வழங்க அரசு திட்டம்
மெட்டல் விசில் செயினுக்கு பதில் விசில் கார்டு வழங்க அரசு திட்டம்
UPDATED : அக் 22, 2026 12:00 AM
ADDED : அக் 21, 2026 11:44 PM
பெங்களூரு: ‘ ‘ கர்நாடக போலீஸ் துறையில், கீழ்நிலையில் பணியாற்றும் ஏட்டுகளுக்கு, பழைய காலத்து மெட்டல் விசில் செயினுக்கு பதிலாக, விரைவில் புதிய விசில் கார்டு வழங்கப்படும், என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
வீர மரணமடைந்த போலீசார் தின நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், முதல்வர் சிவகுமார் பங்கேற்று பேசியதாவது:
இதற்கு முன் மாநில போலீசார் அணிந்திருந்த, பிரிட்டிஷர் காலத்து தொப்பிகள், கோடைக்காலத்தில் தொந்தரவாக இருந்தன. பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்து, நமது மாநில போலீசாருக்கு, நேவி ப்ளூ தொப்பி வழங்கப்பட்டது. இந்த மாற்றம் போலீசார் பணியாற்ற, மிகவும் வசதியாக உள்ளது.
அதே போல, சீருடையில் உள்ள மெட்டல் விசில் செயின் மற்றும் மெட்டல் பட்டன்கள், விரைவில் துருப்பிடிக்கின்றன. இதனால் சீருடை பாழாவதுடன், போலீசாரின் சருமத்துக்கும், பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே இவற்றை மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சிக்கிம், பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டில்லி உட்பட, நாட்டின் பல மாநிலங்கள், காக்கி அல்லது நீல நிற விசில் கார்டு, பாலிஷ்டு மேட் பினிஷ்டு பட்டன்களை, போலீசாரின் சீருடையில் பொருத்தியுள்ளன.
வனத்துறையினர், போக்குவரத்து துறையினருக்கும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல, கர்நாடகாவிலும் இத்தகைய வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
