தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்

 வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்

 வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்


ADDED : பிப் 02, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் கையெழுத்திட மறுத்துள்ளார். மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலர், மேடைகளில் பேசும் போது உணர்ச்சியை துாண்டும் வகையில் பேசுவதால், கலவரம் ஏற்படுகிறது. தனிநபரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கின்றனர். சமூக வலைதளங்களில் அவர்களின் கவுரவத்தை குலைக்கும்படி கருத்து வெளியிடுகின்றனர்.

இதை தடுக்கும் நோக்கில், கர்நாடக அரசு வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவை வகுத்தது. கடந்த 2025 டிசம்பரில், பெலகாவியில் நடந்த குளிர்கால சட்டசபை, மேல்சபை கூட்டத்தில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை கவர்னரின் கையெழுத்துக்காக, அரசு அனுப்பியது. ஆனால், அதில் கையெழுத்திட மறுத்துள்ள கவர்னர், மசோதாவை ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கவர்னர் தாவர்சந்த் கெலாட், 'மசோதாவில் உள்ள அம்சங்கள் தெளிவாக இல்லை. அவைகள் தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் வாய்ப்புள்ளது. வெறுப்பு பேச்சு, சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் என்றாலும், இதை தடுக்கும் பெயரில், பொது மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது சரியல்ல' என, கருத்து தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us