தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கவர்னரின் மொபைல் போன் ஒட்டு கேட்பு? சட்டசபையில் பா.ஜ.,வினர் காரசாரம்

 கவர்னரின் மொபைல் போன் ஒட்டு கேட்பு? சட்டசபையில் பா.ஜ.,வினர் காரசாரம்

 கவர்னரின் மொபைல் போன் ஒட்டு கேட்பு? சட்டசபையில் பா.ஜ.,வினர் காரசாரம்


ADDED : ஜன 29, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதாக சட்டசபையில் பா.ஜ., பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளது.

சட்டசபையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதம் காரசாரமாக நடந்தது. இதில், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் பேசுகையில், “டில்லி பா.ஜ., அலுவலகத்தில் இருந்து கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு மொபைல் போனில் அழைப்பு வருகிறது. இதனாலே, அவர் உரையை படிக்காமல் சென்றார்,” என்றார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., உறுப்பினர்கள் சுனில் குமார், சுரேஷ் குமார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'கவர்னரின் மொபைல் போன் அழைப்புகள் குறித்து எப்படி உங்களுக்கு தெரியும். கவர்னரின் மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுகிறதா. இது தொடர்பாக அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் விளக்கம் அளிக்க வேண்டும்.

'எங்கள் மொபைல் போன்களும் ஒட்டு கேட்கப்படுகிறதா. கவர்னரின் மொபைல் போனை ஒட்டு கேட்கும்படி முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தினாரா. அமைச்சர் அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும்.

'இண்டி' கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னருக்கு எதிராக வேண்டும் என்றே குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன' என்றனர்.

இதை தொடர்ந்து ஹெச்.கே.பாட்டீல் பேசியதாவது:

உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டால், அதை பொய் என நிரூபியுங்கள். ஏன் திரும்பப்பெற சொல்கிறீர்கள். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும். லோக்பவனும் விளக்கம் அளிக்க வேண்டும். நீங்கள் வேண்டினால் விசாரனை நடத்தவும் தயார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

எங்கள் அரசு எதிர்க்கட்சியினர் உட்பட யாருடைய மொபைல் போன்களையும் ஒட்டு கேட்பதில்லை. மொபைல் போன் ஒட்டு கேட்பு என்பது வெறும் அனுமானம்.

தேவைப்பட்டால் விசாரிப்போம். கவர்னரின் உரை குறித்து விவாதிக்க விரும்பவில்லை. அதற்காக சபையில் வருத்தம் தெரிவிப்பது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us