/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஜி.பி.ஏ., அதிகாரிகள் ஆய்வு
/
மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஜி.பி.ஏ., அதிகாரிகள் ஆய்வு
மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஜி.பி.ஏ., அதிகாரிகள் ஆய்வு
மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஜி.பி.ஏ., அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 20, 2025 04:57 AM

பெங்களூரு: பெங்களூரில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தலைமை செயலர் ஷாலினி, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் ஆகிய இருவரும் சோதனை மேற்கொண்டனர்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நகரின் பல பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் ஆகிய அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக தலைமை செயலர் ஷாலினி, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் ஆகியோர் பிற அதிகாரிகளுடன் சென்று, நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கே.ஏ.எஸ்., காலனி, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட், அரகெரே, அகரா சந்திப்பு, இப்லுார் சந்திப்பு, பனத்துார் பிரதான சாலை, விப்காயர் பள்ளி சாலை, சென்ட்ரல் சில்க் போர்டு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, தலைமை செயலர் ஷாலினி கூறியதாவது:
சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும். மழைநீர் வடிகால்கள் துார்வார வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுவது முக்கியம்.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகள் வைக்கவும். இப்லுார் சந்திப்பு அருகே நடைமட்ட மேம்பாலங்கள் அமைக்கவும். விப்காயர் பள்ளி அருகே மேற்கொள்ளும் சாலைப் பணிகள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.