/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கிரஹலட்சுமி' பணத்தை சேமித்து 'வாஷிங் மிஷின்' வாங்கிய பெண்
/
'கிரஹலட்சுமி' பணத்தை சேமித்து 'வாஷிங் மிஷின்' வாங்கிய பெண்
'கிரஹலட்சுமி' பணத்தை சேமித்து 'வாஷிங் மிஷின்' வாங்கிய பெண்
'கிரஹலட்சுமி' பணத்தை சேமித்து 'வாஷிங் மிஷின்' வாங்கிய பெண்
ADDED : அக் 02, 2025 11:05 PM
ராம்நகர்: கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், தனக்கு கிடைத்த நிதியுதவியை பயன்படுத்தி, ஒரு பெண் வாஷிங் மிஷின் வாங்கினார். இதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, முதல்வர் சித்தராமையா பாராட்டியுள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 'கிரஹலட்சுமி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது.
இந்த தொகையை பலரும் நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். வீட்டுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்குகின்றனர்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகரில் வசிக்கும் துளசி என்பவர், கிரஹ லட்சுமி பணத்தை சேமித்து வைத்து, வாஷிங் மிஷின் வாங்கினார். ஆயுத பூஜையன்று இதற்கு பூஜை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
இது குறித்து, முதல்வர் சித்தராமையா, 'எக்ஸ்' வலைதளத்தில், 'பெண்களின் நலனை மனதில் கொண்டு, கிரஹலட்சுமி திட்டத்தை அரசு செயல்படுத்தியது. நவராத்திரி நாளில் வாஷிங் மிஷின் வாங்கி, பூஜை செய்திருப்பது, எனது பண்டிகை மகிழ்ச்சியை அதிகமாக்கியுள்ளது.
'இதே போன்று, மேலும் பல குடும்பங்கள், எங்களின் திட்டத்துக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என, விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.