தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'கிரஹலட்சுமி' திட்டம் 3 ஆண்டு நிறைவு: கட்டடங்கள் பிங்க் நிறத்தில் ஜொலிப்பு

 'கிரஹலட்சுமி' திட்டம் 3 ஆண்டு நிறைவு: கட்டடங்கள் பிங்க் நிறத்தில் ஜொலிப்பு

 'கிரஹலட்சுமி' திட்டம் 3 ஆண்டு நிறைவு: கட்டடங்கள் பிங்க் நிறத்தில் ஜொலிப்பு


ADDED : ஆக 29, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களில் ஒன்றான, 'கிரஹலட்சுமி' திட்டத்தை செயல்படுத்தி, இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கடந்த 2023ல், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த போது, ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது. இவற்றில் கிரஹலட்சுமி திட்டமும் ஒன்றாகும்.

இந்த திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைகின்றனர்.

கிரஹ லட்சுமி திட்டம் செயல்படுத்தப்பட்டு, இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன. இதை சிறப்பாக கொண்டாட, அரசு முடிவு செய்துள்ளது. பிங்க் நிறம் பெண்களின் அடையாளமாக கருதப்படுகிறது.

எனவே, விதான்சவுதா உட்பட, அரசின் முக்கிய கட்டடங்கள் பிங்க் நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us