/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மளிகை கடையில் போதை விற்பனை உரிமையாளர் கைது
/
மளிகை கடையில் போதை விற்பனை உரிமையாளர் கைது
ADDED : ஆக 09, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: மைசூரு நகரில் சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நகரில் போலீசார் இரவு, பகலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின்படி, நசர்பாத் போலீஸ் நிலையம் அருகில் உள்ள சோயல் ஜெயின் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடையில் சோதனை நடத்தியதில், 65 கிராம் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த போதைப் பொருளை கேரளாவில் இருந்து வரவழைத்து விற்றது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.