தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ சுற்றுலா பயணியரை கவரும் ஹலேபீடு தொல்லியல் அருங்காட்சியகம்

 சுற்றுலா பயணியரை கவரும் ஹலேபீடு தொல்லியல் அருங்காட்சியகம்

 சுற்றுலா பயணியரை கவரும் ஹலேபீடு தொல்லியல் அருங்காட்சியகம்


ADDED : மார் 26, 2026 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 12:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: பண்டைய காலத்தில் பயன்படுத்திய நாணயங்கள், பொருட்களை இந்த காலகட்டத்தில் பார்ப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அதுவும் இல்லாமல், இன்றைய இளம் தலைமுறையினருக்கு மொபைல் போன் பார்ப்பதிலேயே நேரம் போவதால், பழங்கால பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் இல்லை.

ஆனாலும் வயதானவர்கள், நடுத்தர வயது உடையவர்களுக்கு பண்டைய கால பொருட்களை பார்க்க வேண்டும்.

அதை ப யன்படுத்திய மக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளது. இதற்காகவே பழங்கால நாணயங்கள், பொருட்களை தொல்லியல் துறை சேகரித்து பாதுகாத்து வருகிற து.

ஹாசன் மாவட்டம், ஹலேபீடுவில் பழங்கால பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் தொல்லியல் அருங்காட்சியகம் உள்ளது.

ஹொய்சாள பேரரசர்களின் வளமான கலை பாரம்பரியத்தை இந்த அருங்காட்சியகம் துல்லியமாக தொகுத்து வழங்குகிறது.

பழங்கால கோவில் சிற்பங்கள், உருவவியல், அதன் பின்னணியை ஆழமாக அறிய விரும்புவோருக்கு இந்த இடம் இன்றியமையாத ஒன்றாக இருக்கும்.

அருங்காட்சியகத்தில் கல் சிலைகள், கல்வெட்டுகள், நிலை கதவுகள், பலகைகள் உட்பட, மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய பல பொருட்கள் குவிந்து உள்ளன. நடராஜர், விநாயகர் சிலைகள், அமர்ந்த நிலையில் உள்ள ஜைன தீர்த்தங்கரர்களின் சிலைகள் என 1,500க்கும் மேற்பட்ட சிலைகள், சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்கின்றன.

அருங்காட்சியத்தில் என்னென்ன பொருட்கள், எந்த மன்னர்கள் காலத்திற்கு உரியது என்பதை தெளிவாக விளக்கும் வகையில் பெரிய அறிவிப்பு பலகையும் வைத்து உள்ளனர். ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரத்தில் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்து விடலாம்.

தினமும் காலை 6:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்து இருக்கும்.

அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்து விட்டு அதன் வளாகத்தில் இருக்கும் ஹொய்சாளேஸ்வரா கோவிலுக்கும் சென்று வரலாம்.

அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க ஒரு நபருக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எப்படி

செல்வது?

 பெங்களூரில் இருந்து ஹலேபீடு 212 கி.மீ., துாரத்தில் உள்ளது.

 மெஜஸ்டிக்கில் இருந்து அடிக்கடி அரசு பஸ்கள் செல்கின்றன.

 ரயிலில் சென்றால் ஹாசன் சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us