ஹனுார் துப்பாக்கிச்சூடு: 3 ஊழியர்களுக்கு முன்ஜாமின்
ஹனுார் துப்பாக்கிச்சூடு: 3 ஊழியர்களுக்கு முன்ஜாமின்
ADDED : செப் 09, 2026 11:31 PM
பெங்களூரு: ஹனுார் துப்பாக்கி சூடு வழக்கில், மூன்று வன ஊழியர்களுக்கு கொள்ளேகால் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று முன்ஜாமின் வழங்கியது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரில் ஆக., 15ம் தேதி, வன விலங்குகளை வேட்டையாட வந்ததாக கூறி, அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய தமிழர்களை வனத்துறையினர் சுட்டு கொன்றனர். மகிமைதாஸ் என்பவர் தலைமறைவானார்.
இதுதொடர்பாக வனத்துறை ஊழியர்கள் மீது, அந்தோணிசாமி மனைவி லுார்து மேரி போலீசில் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கு முதலில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அரசு ஒப்படைத்திருந்தது.
பின், இவ்வழக்கு சி.ஐ.டி.,யிடம் அரசு ஒப்படைத்தது. சி.ஐ.டி., எஸ்.பி., உமாபிரசாந்த் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கை தங்களுக்கு முன்ஜாமின் வழங்க கோரி, கொள்ளேகால் கூடுதல் மாவட்டம் அமர்வு நீதிமன்றத்தில் வன காவலர் சிவராஜ் சசலவாடே, கண்காணிப்பாளர்கள் சிவலிங்கநாயக், கிரிஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், மூவருக்கும் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
