தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் பலத்த மழை; ஸ்தம்பித்த வாகனங்கள்

 பெங்களூரில் பலத்த மழை; ஸ்தம்பித்த வாகனங்கள்

 பெங்களூரில் பலத்த மழை; ஸ்தம்பித்த வாகனங்கள்


ADDED : செப் 30, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால், நகரின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒன்பது கி.மீ., துாரத்தை கடக்க, வாகன ஓட்டிகளுக்கு ஒரு மணி நேரமானது.

பெங்களூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த தொடர் கன மழையால், நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, பெல்லந்துார், பாலகெரே, வெளிவட்ட சாலையை சுற்றி உள்ள பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது.

இதனால் தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கியதால், வாகன போக்குவரத்து தடைபட்டது.

ஒயிட்பீல்டு பகுதியில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெஜஸ்டிக், மல்லேஸ்வரம், கே.ஆர்.மார்க்கெ், லால்பாக், யஷ்வந்த்பூர் போன்ற நகர மைய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

மழை பெய்த நேரத்தில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால், போக்குவரத்து நெரிசலோ அல்லது விபத்துகளோ ஏற்படவில்லை.

இதற்கிடையில், கனமழை காரணமாக, மல்லேஸ்வரத்தில் உள்ள ஸ்மார்ட் பஜார் முன் பெரிய மரம் விழுந்தது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்கள், முற்றிலும் சேதமடைந்தன.

தகவல் அறிந்த ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகளும், பணியாளர்களும் அங்கு விரைந்தனர். சாலையின் குறுக்கே விழுந்திருந்த மரத்தை அகற்றி, சீரான போக்குவரத்துக்கு வழிவகுத்தனர்.

நகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்ட வேண்டியிருந்தது. ஆனாலும், சில இடங்களில் வாகன ஓட்டிகள் சிலர் தடுமாறி, மழைநீரில் விழுந்து எழுந்தனர்.

மாக்லி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழுந்து சாலை நடுவில் நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோல, எச்.எஸ்.ஆர்., லே -அவுட், அகரா ஏரி, காடுபீசனஹள்ளி பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. நேற்று அதிகாலை நெலமங்களாவின் மாதநாயகனஹள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மீது லாரி மோதியது.

சம்பவ இடத்துக்கு வந்த சிக்கபானவாரா போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர்.

பெல்லந்துார் இப்லுாரு ஏரியில் இருந்து மாரத்தஹள்ளி வரையிலான ஒன்பது கி.மீ., துாரத்தை கடக்க, வாகன ஓட்டிகளுக்கு ஒரு மணி நேரமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us