பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மைசூரில் ஹெலிகாப்டர் ஒத்திகை
பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மைசூரில் ஹெலிகாப்டர் ஒத்திகை
ADDED : ஜூலை 30, 2026 11:32 PM

மைசூரு: பிரதமர் மோடி நாளை மைசூரு வருவதை ஒட்டி, நேற்று, இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தினர்.
சுவாமி விவேகானந்தர், 1892ல் மைசூரு வந்தார். நாராயண சாஸ்திரி சாலையில் உள்ள நிரஞ்சனா மடத்தில் மூன்று வாரம் தங்கியிருந்தார். சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கியதை நினைவு கூரும் வகையில், ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம் சார்பில், 35 கோடி ரூபாய் மதிப்பில், 'விவேக் ஸ்மராக்' எனும் இளைஞர் கலாசார மையம் கட்டப்பட்டுள்ளது.
இதை திறக்க, ஆக., 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், பிரதமர் பயணிக்கும் சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டில்லியில் இருந்து மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்திற்கு பிரதமர் வருகிறார். ஹெலிகாப்டர் மூலம், ஓவல் மைதனாத்திற்கு வந்தடைவார். அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு காரில் பயணிக்கிறார்.
இதையடுத்து, நேற்று காலை மைசூரு பல்கலைக்கழகத்தின் கிராபோர்டு பவன் எதிரே உள்ள ஓவல் மைதானத்தில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தது. ஓவல் மைதானத் தின் வெளியேயும், எஸ்.பி.ஜி.,யின் டி.ஐ.ஜி., தலைமையில் ஒத்திகை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு, சிற்பி அருண் யோகிராஜ், கடந்த 15 நாட்களாக வடிவமைத்த, 8.5 கிலோ எடையில், ஒன்றரை அடி நீளமுள்ள சுவாமி விவேகானந்தர் சிலையும், மைசூரின் சிறப்பம்சங்கள் அடங்கிய பெட் டியும் பரி சாக வழங் கப்படுகிறது.
