தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ஹலோபிளாக ் ' கற்கள் வீட்டிற்குள் விழுந்து நான்கு வயது பெண் குழந்தை பரிதாப பலி 

 'ஹலோபிளாக ் ' கற்கள் வீட்டிற்குள் விழுந்து நான்கு வயது பெண் குழந்தை பரிதாப பலி 

 'ஹலோபிளாக ் ' கற்கள் வீட்டிற்குள் விழுந்து நான்கு வயது பெண் குழந்தை பரிதாப பலி 


ADDED : டிச 19, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எச்.ஏ.எல்.: கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தில் இருந்து ஹலோபிளாக் கற்கள் வீட்டிற்குள் விழுந்ததால், நான்கு வயது பெண் குழந்தை இறந்தது.

பெங்களூரு எச்.ஏ.எல்., சின்னப்பனஹள்ளியில் வசிப்பவர் சீனிவாசலு. இவர் தன் வீட்டின் அருகே புதிதாக வணிக கட்டடம் கட்டி வருகிறார். கட்டுமான பணியில் விஜயபுரா மாவட்டத்தின் ஸ்ரீசைலா என்பவர் ஈடுபட்டு உள்ளார். கட்டடத்தின் அருகே உள்ள சிறிய வீட்டில் ஸ்ரீசைலா, தன் மனைவி, மகன்கள் ஷ்ரியான், 6, சேகர், 5, மகள் மனுஸ்ரீ, 4 ஆகியோருடன் வசித்தார்.

நேற்று மாலை ஸ்ரீசைலாவும், அவரது மனைவியும் கடைக்கு சென்றிருந்தனர். குழந்தைகள் மூன்று பேரும் வீட்டில் விளையாடினர். அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின், நான்காவது மாடியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த, ஹலோபிளாக் கற்கள் சரிந்து, ஸ்ரீசைலா குடும்பத்தினர் தங்கி இருந்த வீட்டிற்குள் விழுந்தது.

தலையில் கல் பலமாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மனுஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்தார். ஷ்ரியான், சேகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சீனிவாசலு மீது எச்.ஏ.எல்., போலீசார் வழக்குபதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us