/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவ மாணவர் மனு தள்ளுபடி செய்த ஐகோர்ட்
/
மருத்துவ மாணவர் மனு தள்ளுபடி செய்த ஐகோர்ட்
ADDED : அக் 08, 2025 12:45 AM
பெங்களூரு : பயோ கெமிஸ்ட்ரி பாடத்தில் தொடர்ந்து நான்கு முறை தேர்ச்சி பெறாததால், ஐந்தாவது முறையாக தேர்வு எழுத அனுமதிக்க கோரிய, எம்.பி.பி.எஸ்., மாணவரின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூரு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மருத்துவ கல்லாரியில், எம்.பி.பி.எஸ்., படித்து வருபவர் நிஷத் கோயல். அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்ற கோயல், பயோ கெமிஸ்ட்ரி பாடத்தில் மட்டும் நான்கு முறை தொடர்ந்து தேர்ச்சி பெறவில்லை.
பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சில் கமிஷன் விதிகளின்படி, தோல்வியடைந்த பாடத்தில் தேர்வு எழுத நான்கு முறை மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஐந்தாவது முறையாக அம்மாணவர் தேர்வு எழுத கல்லுாரி அனுமதி வழங்கவில்லை.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவர் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தேவதாஸ், 'பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சில் கமிஷன் விதிகளின்படி, தோல்வியடைந்த பாடத்தில் தேர்வு எழுத நான்கு முறை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டு உள்ளது.
'எனவே, பல்கலைக்கழக விதிமுறைக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க எந்த நீதிமன்றத்தாலும் முடியாது. எனவே, மாணவரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.