/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ADDED : ஏப் 24, 2025 07:17 AM
பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்த பொதுநல மனு தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, முதல்வர் சித்தராமையாவிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திலும் அறிக்கையை முன்வைத்து விவாதம் நடந்தது.
இந்நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சமூக ஆர்வலர் சிவராஜ் கனகஷெட்டி என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் நேற்று முன்தினம் விசாரித்தனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் குருமத், விவேக் சுப்பாரெட்டி வாதிடுகையில், 'பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, அரசு அவசரமாக செயல்படுத்த பார்க்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
'மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளையும் அரசு மீறுகிறது. அதிகாரம் இல்லாமல் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.
இதையடுத்து, தன் நிலைப்பாட்டை விளக்கி பதில் மனுத்தாக்கல் செய்யும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடக்க உள்ளது.