/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலை வழக்கில் இருவருக்கு 'ஆயுள்' 6 ஆண்டுகளாக குறைத்தது ஐகோர்ட்
/
கொலை வழக்கில் இருவருக்கு 'ஆயுள்' 6 ஆண்டுகளாக குறைத்தது ஐகோர்ட்
கொலை வழக்கில் இருவருக்கு 'ஆயுள்' 6 ஆண்டுகளாக குறைத்தது ஐகோர்ட்
கொலை வழக்கில் இருவருக்கு 'ஆயுள்' 6 ஆண்டுகளாக குறைத்தது ஐகோர்ட்
ADDED : அக் 07, 2025 05:01 AM
பெங்களூரு: தார்வாடில் பெயின்டரை கொலை செய்த குற்றவாளியின் ஆயுள் தண்டனையை, ஆறு ஆண்டுகளாக குறைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தார்வாடின் கசாபாபேட்டையில் டீ கடை ஒன்றில் பெயின்டர் ஷஹாபுதீன் என்பவர், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கசாபாபேட்டை போலீசார், சம்சுதீன், ஜுபேர் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில், 2022ல், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 75,000 ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனு மீது நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பூனாச்சா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.
மனுதாரர்கள் தரப்பு வக்கீல், 'ஷாஹாபுதீனை கத்தியால் குத்தியதை பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளன.
விசாரணை நீதிமன்றம் இதை கருத்தில் கொள்ளாமல், மனுதாரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கூறியதாவது:
கொல்லப்பட்டவரின் உறவினர்கள் உட்பட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பரிசீலிக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஐ.பி.சி., பிரிவு 302ன் கீழ், ஒரு குற்றம் செய்யப்பட வேண்டுமானால், கொலை செய்யும் நோக்கமும், முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும்.
'குற்றமற்ற கொலை' என்பதற்கான பிரிவு 302ன் கீழ் தண்டனை விதிக்கப்படலாம். மேலும் பாதிக்கப்பட்டவரின் தந்தைக்கு, குற்றவாளிகள் தலா 25,000 ரூபாய் வழங்க வேண்டும்.
எனவே, இருவருக்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 2020 முதல் இருவரும் சிறையில் இருப்பதால், அந்நாட்கள், தண்டனையில் கழிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.