/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பலாத்கார வழக்கில் போலீஸ்காரருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு
/
பலாத்கார வழக்கில் போலீஸ்காரருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு
பலாத்கார வழக்கில் போலீஸ்காரருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு
பலாத்கார வழக்கில் போலீஸ்காரருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு
ADDED : நவ 15, 2025 08:03 AM
பெங்களூரு: பலாத்கார வழக்கில் போலீஸ்காரருக்கு முன்ஜாமின் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ராய்ச்சூர் சிந்தகியை சேர்ந்தவர் பகவந்த் ராய் பிரதார், 30. துமகூரு குனிகல் அம்ருத்துார் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இங்கு வேலை செய்த 30 வயது பெண் போலீசும், பகவந்த் ராயும் காதலித்தனர்.
காதலியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற பகவந்த் ராய், சாமியின் புகைப்படம் முன் வைத்து, 'உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என சத்தியம் செய்துள்ளார். திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் பகவந்த் ராய், தன் காதலியை கைவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயம் செய்தார். பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அளித்த புகாரில், பகவந்த் ராய் மீது அம்ருத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
நீதிபதி ராசய்யா விசாரிக்கிறார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், 'தன் மனுதாரரை பொய் வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. பிரதிவாதி பலாத்காரத்திற்கு ஆளானதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என்று வாதிட்டார்.
பிரதிவாதி தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'என் மனுதாரர் பட்டியலின சாதியை சேர்ந்தவர். அவரை தன் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு மனுதாரர் தப்பிக்க பார்க்கிறார்' என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராசய்யா, பிரதிவாதி தரப்பு வாதத்தை ஏற்று, புகார்தாரருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்தார்.

