தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குடியிருந்த வீட்டில் திருட்டு: தம்பதிக்கு போலீஸ் ‘வலை’

குடியிருந்த வீட்டில் திருட்டு: தம்பதிக்கு போலீஸ் ‘வலை’

குடியிருந்த வீட்டில் திருட்டு: தம்பதிக்கு போலீஸ் ‘வலை’


UPDATED : நவ 30, 2026 12:00 AM

ADDED : நவ 29, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:00 AM ADDED : நவ 29, 2026 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெலமங்களா: குடியிருந்த வீட்டு உரிமையாளரை ஏமாற்றி, அவரது வீட்டில், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய தம்பதியை போலீசார் தேடுகின்றனர்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், சிக்ககொல்லரஹட்டியில் சொந்த வீட்டில் வசிப்பவர் ஜெயலட்சுமி, 40. உறவினர்கள் யாருமின்றி தனியாக வசிக்கிறார். இவரது வீட்டில் ராஜு, 30, என்பவர், தன் மனைவி பூஜா, 25, மற்றும் ஒரு பெண் குழந்தையுடன், இரண்டு மாதமாக வாடகைக்கு குடியிருக்கிறார்.

தனியாக வசிக்கும் ஜெயலட்சுமியிடம் தங்க நகைகள், பணம் இருப்பதை அறிந்த தம்பதி, கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர்.

இதன்படி, இம்மாதம் 27ம் தேதியன்று, ஜெயலட்சுமியிடம் சென்ற பூஜா, ‘நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். எங்கும் செல்வதில்லை. என்னோடு வாருங்கள்; வெளியே செல்லலாம். வீட்டில் இருந்து என்ன செய்ய போகிறீர்கள்’ என கூறி, பலவந்தமாக அழைத்துச் சென்றார்.

இவர்கள், வெளியே சென்ற போது, ராஜு உடன் வரவில்லை. இதுபற்றி ஜெயலட்சுமி கேட்ட போது, பூஜா, ‘என் கணவர் பின்னால் வருவார். நாம், குழந்தையுடன் முன்னே செல்லலாம்’ என, நம்ப வைத்து, அழைத்து சென்றார்.

அவர்கள் சென்ற பின், ராஜு, கள்ளச்சாவியை பயன்படுத்தி ஜெயலட்சுமியின் வீட்டை திறந்து, உள்ளே சென்றார். பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி, மனைவிக்கு தகவல் கொடுத்துவிட்டு தப்பியோடினார்.

பூஜா, ஜெயலட்சுமியிடம் ‘குழந்தை கழிப்பறைக்கு செல்ல வேண்டுமாம். நான் அழைத்து செல்கிறேன். நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் வந்து விடுகிறேன்’ என கூறிவிட்டு சென்றார்.

நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்த ஜெயலட்சுமி, வீடு திரும்பினார். அப்போது, வீடு கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, திருட்டு நடந்திருப்பது தெரிந்தது.

உடனடியாக, மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் அங்கு வந்து பார்வையிட்டனர். தலைமறைவான தம்பதியை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us