/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.யு., விடைத்தாள் மதிப்பீடு பணி 36,868 பேருக்கு கவுரவ ஊதியம்
/
பி.யு., விடைத்தாள் மதிப்பீடு பணி 36,868 பேருக்கு கவுரவ ஊதியம்
பி.யு., விடைத்தாள் மதிப்பீடு பணி 36,868 பேருக்கு கவுரவ ஊதியம்
பி.யு., விடைத்தாள் மதிப்பீடு பணி 36,868 பேருக்கு கவுரவ ஊதியம்
ADDED : செப் 03, 2025 09:57 AM
பெங்களூரு : 'நடப்பாண்டு 2024 - 25ம் ஆண்டு பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்ற 39,776 விரிவுரையாளர்களில், 36,868 பேருக்கு கவுரவ ஊதியம் வழங்கப்பட்டுள்ளது' என, கர்நாடக பள்ளி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
வாரியத்தின் அறிக்கை:
நடப்பாண்டு 2024 - 25ம் ஆண்டு பி.யு., இரண்டாம் ஆண்டு, மூன்று தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டில் 39,776 விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். இவர்களில், 36,868 பேருக்கு கவுரவ ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது.
டி.பி.டி., எனும் நேரடி வைப்புத் தொகை செலுத்தும் முறை மூலம், பணம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. தொழில்நுட்ப காரணங்களால், 2,908 விரிவுரையாளர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் கவுரவ ஊதியம் வழங்கப்படும்.
பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வுக்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் வசூலிக்கப்படும் 400 ரூபாய் கட்டணம், அந்தந்த கல்லுாரிகளின் முதல்வர்கள் நேரடியாக அரசு கணக்கில் செலுத்துவர். அந்தாண்டுக்கான கோரிக்கையின்படி, தேர்வு செலவுகளை அரசு விடுவிக்கும்.
தேர்வு கட்டணத்தை திருத்துவதற்கான திட்டம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அளிக்கும் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.