/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போக்குவரத்து விதிமீறல் அபராதம் பெயரில் மோசடி ஹூப்பள்ளி போலீசார் எச்சரிக்கை
/
போக்குவரத்து விதிமீறல் அபராதம் பெயரில் மோசடி ஹூப்பள்ளி போலீசார் எச்சரிக்கை
போக்குவரத்து விதிமீறல் அபராதம் பெயரில் மோசடி ஹூப்பள்ளி போலீசார் எச்சரிக்கை
போக்குவரத்து விதிமீறல் அபராதம் பெயரில் மோசடி ஹூப்பள்ளி போலீசார் எச்சரிக்கை
ADDED : டிச 29, 2025 06:26 AM
ஹூப்பள்ளி: 'போக்குவரத்து விதிமீறல் அபராதம் என்ற பெயரில் மோசடி நடக்கிறது. அறிமுகம் இல்லாதவர்கள் அனுப்பும், 'லிங்க்'களை கிளிக் செய்யாதீர்கள்' என, பொதுமக்களை ஹூப்பள்ளி - தார்வாட் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
போக்குவரத்து விதிமீறல் அபராதம் வசூலிப்பது தொடர்பாக, மோசடி நபர்கள் லிங்க் அனுப்புவர். இதன் மூலம் அதை கிளிக் செய்வோரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை திருட முயற்சிக்கின்றனர்.
எனவே, அறிமுகம் இல்லாதவர்கள், எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பும் எந்த லிங்க்களையும் கிளிக் செய்யாதீர்கள். கிளிக் செய்தவுடன் உங்களின் மொபைல் ஹேக் ஆகி விடும். அதிலுள்ள வங்கி கணக்கு விபரங்கள், தனிப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் உட்பட முக்கியமான தகவல்களை திருடி விடுவர். இதை பயன்படுத்தி உங்களை பிளாக்மெயில் செய்யவோ, வங்கி கணக்கில் உள்ள பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளும் அபாயமோ உள்ளது.
ஹூப்பள்ளி - தார்வாட் நகரில், இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. சைபர் குற்றவாளிகள், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வழியாக, வாகன உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினர். அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் லிங்கை கிளிக் செய்தவுடன், வங்கி கணக்கில் உள்ள லட்சக்கணக்கானரூபாயை, சைபர் குற்றவாளிகள் அபகரித்து விட்டனர்.
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் அனுப்பும் லிங்க்கள், எஸ்.எம்.எஸ்.,களை பொருட்படுத்தாதீர்கள். ஒரு வேளை இத்தகைய லிங்க்கள் வந்தால், சைபர் உதவி எண், 1930ல் தகவல் தெரிவியுங்கள் அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தாருங்கள். போலீசார் நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

