/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிஜிட்டல் பலகையில் கன்னடர் குறித்து அவதுாறு ஹோட்டல் மேலாளர், ஊழியர் கைது

ADDED : மே 17, 2025 11:20 PM

பெங்களூரு: ஹோட்டல் முன்வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பலகையில், கன்னடர்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பதிவிட்டதால், ஹோட்டல் மேலாளர், ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு தென்கிழக்கு டி.சி.பி., சாரா பாத்திமா நேற்று கூறியதாவது:
கோரமங்களாவில் நெக்சஸ் மால் அருகில் 'ஹோட்டல் ஜிஎஸ் ஷுட்ஸ்' உள்ளது. இந்த ஹோட்டலின் டிஜிட்டல் பலகையில், மே 16ம் தேதி, கன்னடர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
இதை பார்த்த, சமூக வலைதளங்களை கண்காணிக்கும் போலீஸ் அதிகாரி, மடிவாளா போலீசில் புகார் செய்தார். மடிவாளா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஹோட்டலுக்கு சென்ற போலீசார், டிஜிட்டல் போர்டை அகற்றினர். ஹோட்டல் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஹோட்டல் மேலாளர், ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, 'மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் போர்டு தயாரிக்கப்பட்டது. அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்த பின், தவறாக தகவல்கள் வருவதாக கூறினோம்' என்றனர்.
இது தொடர்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.