தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.1,400 கோடி சேர்த்தது எப்படி? முதல்வருக்கு குமாரசாமி 'கிடுக்கி

 ரூ.1,400 கோடி சேர்த்தது எப்படி? முதல்வருக்கு குமாரசாமி 'கிடுக்கி

 ரூ.1,400 கோடி சேர்த்தது எப்படி? முதல்வருக்கு குமாரசாமி 'கிடுக்கி


ADDED : ஜூன் 14, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: ''வெறும் 3 ஏக்கர் பரம்பரை சொத்து கொண்ட, முதல்வர் சிவகுமார், 1,400 கோடி ரூபாய் சேர்த்தது எப்படி,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ராம்நகரின் பிடதியில் டவுன்ஷிப் அமைக்க, முதல்வர் சிவகுமார் முயற்சி செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, டவுன்ஷிப் அமைக்க ஒப்புதல் அளித்ததாக கூறுகிறார். பிரதமர் அனுமதி அளித்தாரா, இல்லையா என்று எனக்கு தெரியாது. மோடி குஜராத் பிரதமராக இருந்த போது அங்கு பல டவுன்ஷிப்களை உருவாக்கி உள்ளார். ஆனால் எந்த இடத்தில் அமைய உள்ளது என்பது தான் கேள்வி.

ரியல் எஸ்டேட் அதிபரான சிவகுமார், பிடதி டவுன்ஷிப் பகுதியில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய பார்க்கிறார். அவரது பரம்பரை சொத்து வெறும் 3 ஏக்கர் நிலம் தான். தற்போது, 1,400 கோடி ரூபாய் சொத்து அவரிடம் எப்படி வந்தது?

டவுன்ஷிப் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியது நான் தான். ஆனால் நான் கூறி 20 ஆண்டுகள் ஆகி விட்டன. அப்போதும், இப்போதும் உள்ள நிலைமையை பார்க்க வேண்டும். டவுன்ஷிப் அமைக்க அரசு குறித்து உள்ள நிலங்களில் தற்போது விவசாயம் நடக்கிறது. லட்சக்கணக்கான தென்னை, பாக்கு மரங்கள் உள்ளன. பால் பண்ணை தொழில் நடக்கிறது. விவசாயிகள் நிலத்தை பறித்து டவுன்ஷிப் அமைக்க உள்ளதன் அவசியம் என்ன?

பொது, தனியார் கூட்டமைப்பு பங்களிப்பில் டவுன்ஷிப் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அரசு பணிகளை செய்யாது. ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விடும். சில விவசாயிகள் இந்த திட்டத்திற்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால் 80 சதவீதம் பேர் எதிராக உள்ளனர். அரசே, ரியல் எஸ்டேட் முகவராக செயல்படுகிறது.

அலுவலகத்தில் லஞ்சம் வாங்க கூடாது என்று முதல்வர் கூறியதாக செய்திதாள்களில் படித்தேன். அப்படி என்றால் வெளியே வாங்கலாமா?

கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், 2 மாதங்களாக பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கவில்லை. அதற்காக ஒதுக்கிய 5,000 கோடி ரூபாய் என்ன ஆனது. இதுபற்றி முன்னாள், இன்னாள் முதல்வர்கள் பதில் சொல்ல வேண்டும். கிரஹலட்சுமி, கிரஹஜோதி திட்டங்களுக்கு புதிதாக விண்ணப்பிக்க கூறி உள்ளனர். இதனால் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்பட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us