ADDED : ஏப் 23, 2026 04:17 AM
மஹாதேவபுரா: சூதாட்டத்தில் ஈடுபடுவதை கைவிட கணவர் மறுத்ததால், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு மஹாதேவபுரா ஏ.நாராயணபுராவில் வசிப்பவர் சங்கர், 31. இவரது மனைவி கனகா, 28. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். தம்பதி பழ வியாபாரம் செய்தனர். ஆன்லைன் சூதாட் டம், குடிப்பழக்கத்திற்கு சங்கர் அடிமையாகி இருந்ததால், தம்பதி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இரு குடும்பத்தினரும் சமரசம் செய்தனர். இந்நிலையில் பழ வியாபாரம் மூலம் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை, மனைவிக்கு தெரியாமல் கணவர் பதுக்கி வைத்தார். அந்த பணத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டார்.
இ ப்பழக்கத்தை கைவிடும்படி மனைவி கூறியும் கேட்கவில்லை. மனம் உடைந்த கனகா நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது பெற்றோர் அளித்த புகாரில், மஹாதேவபுரா போலீசார், சங்கர் மீது தற்கொலைக்கு துாண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
