தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நடத்தை சந்தேகத்தில் விபரீதம் மனைவியை கொன்று கணவர் ஓட்டம்

நடத்தை சந்தேகத்தில் விபரீதம் மனைவியை கொன்று கணவர் ஓட்டம்

நடத்தை சந்தேகத்தில் விபரீதம் மனைவியை கொன்று கணவர் ஓட்டம்


ADDED : செப் 23, 2025 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2025 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: வேறு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து, இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் தேடுகின்றனர்.

ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணாவை சேர்ந்தவர் ரேகா, 30. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனிப்பட்ட பிரச்னை காரணமாக, கணவரை பிரிந்தார். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ஒன்றரை ஆண்டுக்கு முன், இதே நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி துமகூரின் சிராவை சேர்ந்த லோகேஷ், 32, என்பவரின் அறிமுகம் ரேகாவுக்கு கிடைத்தது. அவரும் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தவர். இவர்களின் அறிமுகம் காதலாக மாறியது. சில மாதங்களுக்கு முன்பு, திருமணம் செய்து கொண்டனர். பெங்களூரின் சுங்கதகட்டேவில் வசித்தனர்.

ஆரம்பத்தில் தம்பதி அன்யோன்யமாக இருந்தனர். ஆனால் வேறு ஆணுடன் ரேகா கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக, லோகேஷ் சந்தேகித்தார். இதனால் தம்பதிக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. கணவரின் செயலால் மனம் வருந்திய ரேகா, தனியாக சென்று வசிக்க துவங்கினார். இது லோகேஷுக்கு மேலும் கோபத்தை ஏற் படுத்தியது.

நேற்று காலை 11:30 மணியளவில், சுங்கதகட்டே பஸ் நிலையம் அருகில், தன் மகளுடன் ரேகா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்து தகராறு செய்து, மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். பலத்த காயமடைந்த ரேகாவை, அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காமாட்சி பாளையா போலீசார், கொலையாளியை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us