ADDED : செப் 05, 2026 11:13 PM
கோலார்: கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின், சொன்னேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 36. இவரது மனைவியுடன், அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், 36, கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதையறிந்த சுரேஷ், மனைவியையும், வெங்கடேஷையும் திட்டி கண்டித்தும் பயனில்லை.
இதனால் கோபமடைந்த சுரேஷ், கடந்த சில நாட்களுக்கு முன், தன் நண்பர் சந்தோஷுடன் சேர்ந்து, வெங்கடேஷை அழைத்து சென்றனர். அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை சின்ன திருப்பதி அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டனர்.
இதற்கிடையே, வெங்கடேஷ் காணாமல் போனது குறித்து, அவரது குடும்பத்தினர் மாலுார் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசார் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்திய போது, வெங்கடேஷ் காணாமல் போன நாளன்று, சுரேஷ் அழைத்து சென்றது தெரிந்தது.
அவரை விசாரித்த போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சுரேஷையும், சந்தோஷையும் நேற்று கைது செய்தனர்.
