/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நான் துறவியல்ல எனக்கும் ஆசை உண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ., தத்துவம்
/
நான் துறவியல்ல எனக்கும் ஆசை உண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ., தத்துவம்
நான் துறவியல்ல எனக்கும் ஆசை உண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ., தத்துவம்
நான் துறவியல்ல எனக்கும் ஆசை உண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ., தத்துவம்
ADDED : ஜன 28, 2026 06:46 AM

''நான் துறவியல்ல; எனக்கும் ஆசை உண்டு. எனக்கு அமைச்சர் பதவி தந்தால், அரிசிகெரேவுக்கு சிறப்பாக இருக்கும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா கேள்வி எழுப்பினார்.
ஹாசனில் அவர் கூறியதாவது:
கர்நாடகா அரசியலில், எனக்கென தனி இடம் உள்ளது. அரசியல் என்றால் என்ன என்பது எனக்கு தெரியும். முதல்வர் பதவி தருவதாக கூறி, எடியூரப்பாவை நீங்கள் ஏமாற்றவில்லையா.
என்னை திட்டுவதற்கென்றே ம.ஜ.த.,வினர் கூட்டம் நடத்தி உள்ளனர். நான் என்ன கொலை செய்தேனா அல்லது ஏமாற்றினேனா; தேவகவுடாவின் பிள்ளைகள் என்னை பற்றி பேசுகின்றனர். கட்சி சீட்களை எல்லாம், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கே தந்தீர்கள்.
யார் என்ன விதைத்தார்களோ, அதையே அறுவடை செய்வர். அரிசிகெரேயில் ம.ஜ.த.,வை ஒருங்கிணைத்தவன் நான். ம.ஜ.த.,வை விட்டு பலரும் வெளியேறி வருகின்றனர். வரும் தேர்தலில், ம.ஜ.த.,வுக்கு 50 ஆயிரம் ஓட்டுகள் கூட கிடைக்காது.
உங்களை போன்றவன் தான் நானும். நான் துறவியல்ல; எனக்கும் ஆசை உண்டு. எனக்கு அமைச்சர் பதவி தந்தால், அரிசிகெரேவுக்கு சிறப்பாக இருக்கும். நான் இறக்கும் வரை அரிசிகெரே மக்கள், என்னை கைவிடமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

