/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தமன்னாவை பார்த்து சோப் வாங்கவில்லை'
/
'தமன்னாவை பார்த்து சோப் வாங்கவில்லை'
ADDED : மே 24, 2025 10:59 PM

பெங்களூரு: ''தமன்னாவின் முகத்தை பார்த்து யாரும் மைசூரு சாண்டல் சோப் வாங்க மாட்டார்கள்; தரம் நன்றாக இருந்தால் மட்டுமே வாங்குவர்,'' என, முன்னாள் எம்.பி.,யும், நடிகையுமான ரம்யா தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
இன்றைய காலத்தில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை பற்றி விளம்பரம் செய்ய, ஏராளமான அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. நடிகையரை துாதராக நியமிக்கும் காலம் மலையேறிவிட்டது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகுமே தவிர, வேறு எந்த பயனும் ஏற்படாது.
தமன்னாவின் முகத்தை பார்த்து, யாரும் சோப்பு வாங்க மாட்டார்கள். இன்றைய காலத்தில், பிரபலங்களின் முகத்துக்காக பொருட்களை வாங்குவது இல்லை. பொருட்கள் தரமாக இருந்தால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்வது எளிது.
மைசூரு சாண்டல் சோப்புக்கு துாதர்களே தேவையில்லை. உலகம் முழுதும் பரவியுள்ள கன்னடர்கள், மைசூரு சாண்டல் சோப் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும். இது நம் பெருமைக்குரிய உற்பத்தியாகும்.
ஆப்பிள் நிறுவனம் தன் உற்பத்தி பொருட்கள் பற்றி, பிரசாரம் செய்ய எந்த துாதரையும் நியமிக்கவில்லை. அதே போன்று மைசூரு சாண்டல் சோப் நிறுவனமும், துாதரை நியமிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.