தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ என் சம்பளத்தையே தருகிறேன் பா.ஜ., - எம்.எல்.ஏ., அறிவிப்பு 

 என் சம்பளத்தையே தருகிறேன் பா.ஜ., - எம்.எல்.ஏ., அறிவிப்பு 

 என் சம்பளத்தையே தருகிறேன் பா.ஜ., - எம்.எல்.ஏ., அறிவிப்பு 


ADDED : செப் 26, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: ''விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டால், எனது ஒரு ஆண்டு சம்பளத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறேன்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., எம்.ஆர்.பாட்டீல் கூறி உள்ளார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

தார்வாட் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. தற்போது, மிதமான வறட்சி என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை கடுமையான வறட்சி என அறிவிக்க வேண்டும். மழையின்மையால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் சேதம் அடைந்த நிலத்தில், 2 ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

என்னுடைய கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் முழு பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டால், என் ஒரு ஆண்டு சம்பளத்தை விவசாயிகளுக்கு தருகிறேன். மாநில அரசு தற்போது விவசாயிகளுக்கு வழங்கும் 2,500 ரூபாய் மானியம் போதாது. நிவாரண தொகை உயர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us