/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., ஆட்சியில் 63 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக நான் கூறவே இல்லை நீதிபதி வீரப்பா விளக்கம்
/
காங்., ஆட்சியில் 63 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக நான் கூறவே இல்லை நீதிபதி வீரப்பா விளக்கம்
காங்., ஆட்சியில் 63 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக நான் கூறவே இல்லை நீதிபதி வீரப்பா விளக்கம்
காங்., ஆட்சியில் 63 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக நான் கூறவே இல்லை நீதிபதி வீரப்பா விளக்கம்
ADDED : டிச 06, 2025 05:35 AM

பெங்களூரு: ''காங்கிரஸ் ஆட்சியில், 63 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக நான் கூறவே இல்லை,'' என, துணை லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா விளக்கம் அளித்து உள்ளார்.
கர்நாடகாவில் அரசு ஒப்பந்த பணிகளில், 63 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக, துணை லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா கூறியதாக, ஊடகங்களில் செய்திகளில் வெளியாகின.
இதனை மேற்கொள் காட்டி ஊடகங்கள் முன் பேசிய, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், '63 சதவீத கமிஷன் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். மானம், மரியாதை இருந்தால் ஆட்சியாளர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.
பெரிய ஆபத்து இந்நிலையில் நீதிபதி வீரப்பா நேற்று அளித்த பேட்டி:
நம் மாநிலத்தின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் பெருகி வருகிறது. ஊழல் பட்டியலில் நாம், ஐந்தாவது இடத்தில் உள்ளோம். இந்த அவலம் நிறுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டியது நேரிடும். ஊழலில் கர்நாடகாவின் பங்கு, 63 சதவீதமாக உள்ளது என்று நான் கூறினேன்.
ஆனால், அரசு ஒப்பந்த பணிகளில், 63 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக, நான் கூறியதாக திரித்து செய்திகள் வெளியாகின.
இந்திய ஊழல் கணக்கெடுப்பு, 2019 தரவு அடிப்படையிலானது; அதையே நான் கூறினேன். சில அரசியல்வாதிகள் என் அறிக்கையை திரித்து, அவர்களது சொந்த லாபத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள மாட்டேன்.
96வது இடம் அரசியல் ரீதியாக எனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு இல்லை. அரசு வக்கீல், உயர் நீதிமன்ற நீதிபதி, தற்போது துணை லோக் ஆயுக்தா நீதிபதியாக உள்ளேன். என் பணியை வெளிப்படை தன்மையுடன் செய்கிறேன். இன்று, நமது நான்கு அமைப்புகளும் பலவீனமாக உள்ளன.
சுதந்திரம் அடைவதற்கு முன்பே நாட்டில் ஊழல் இருந்தது. இன்று புற்றுநோய் போல பரவி உள்ளது. இதற்கு நாம் அனைவரும் பொறுப்பு. பணத்தால் வாக்காளர்கள் கவரப்பட்டு உள்ளனர். எந்த அரசும் ஊழலை ஒழிக்கவில்லை. நான் எந்த அரசையும் குறிவைத்து பேசவில்லை. ஊழலில், 180 நாடுகளில் இந்தியா, 96 வது இடத்தில் உள்ளது பற்றியும் தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அளவே இல்லை இதையடுத்து சித்தராமையாவின் எக்ஸ் பதிவு:
துணை லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பாவின் வார்த்தைகளை திரித்து, பா.ஜ., போலி கதையை பரப்புகிறது. 2019ம் ஆண்டு தரவு அடிப்படையிலான அறிக்கையை வைத்து பேசியதாக, வீரப்பா கூறி உள்ளார். அப்போது எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு இருந்தது.
அந்த நேரத்தில், 63 சதவீத கமிஷன் வாங்கப்பட்டது. கொரோனா தடுப்பு உபகரணம் வாங்கியதில் முறைகேடு; எஸ்.ஐ., ஆட்சேர்ப்பு ஊழல் என பா.ஜ., செய்த ஊழல்களுக்கு அளவே இல்லை.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர், தரவுகளை சரிபார்த்து அரசு மீது குற்றச்சாட்டு கூற வேண்டும் என்று, அசோக்கிற்கு, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் எம்.பி.பாட்டீல் போன்றோரும் பதிலடி கொடுத்து உள்ளனர்.

