தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராமலிங்க ரெட்டி அதிருப்தி நீடித்தால் ஜி.பி.ஏ., தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு

 ராமலிங்க ரெட்டி அதிருப்தி நீடித்தால் ஜி.பி.ஏ., தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு

 ராமலிங்க ரெட்டி அதிருப்தி நீடித்தால் ஜி.பி.ஏ., தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு


ADDED : ஜூன் 06, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அதிருப்தியில் உள்ள, ராமலிங்க ரெட்டியை சரிகட்டாவிட்டால் ஜி.பி.ஏ., தேர்தலில், காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதி என, அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரு நகரில் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.,வுக்கு 15; காங்கிரசுக்கு 12; சுயேச்சை ஒருவர் என 28 பேர் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.

தற்போது உள்ள 28 எம்.எல்.ஏ.,க்களில் அதிக முறை அதாவது, எட்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். ராமலிங்க ரெட்டி மட்டும் தான். இவர், மாநகராட்சி கவுன்சிலராக இருந்து எம்.எல்.ஏ., ஆனவர்.

இதனால் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கவுன்சிலர்களை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும்; மக்கள் சந்திக்கும் பிரச்னை என்னென்ன; அதை தீர்ப்பது எப்படி என்பது, ராமலிங்க ரெட்டிக்கு அத்துபடியான விஷயமாக இருந்தது. பெங்களூரு மாநகராட்சியாக இருந்த போது, அதன் மீது செல்வாக்கு செலுத்தினார்.

மாநகராட்சிக்கு மூடு விழா நடத்தி ஜி.பி.ஏ., உதயமாகி, அதன் கீழ், ஐந்து மாநகராட்சிகள் வருவதிலும், ராமலிங்க ரெட்டி பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

பெங்களூரு நகர வளர்ச்சி துறை தனக்கு கிடைக்கும்; அந்த துறையின் கீழ் வரும் ஜி.பி.ஏ.,வில் செல்வாக்கு செலுத்தலாம் என்று நினைத்திருந்த அவருக்கு, அந்த துறை கிடைக்கவில்லை. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமாவும் செய்துள்ளார்.

ராமலிங்க ரெட்டியை சரிகட்டா விட்டால், ஜி.பி.ஏ., தேர்தலில் காங்கிரசுக்கு தான் பாதிப்பு என, அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ராமலிங்க ரெட்டி பெங்களூரில் செல்வாக்கு மிக்க தலைவர்; அனைத்து கட்சியினருடன் நட்பு உள்ளது. அவர் கட்சி மீது அதிருப்தியில் இருந்து, ஜி.பி.ஏ., தேர்தலில் சரியாக வேலை செய்யாவிட்டால், அது காங்கிரசுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். ஐந்து மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற முடியாத நிலை கூட ஏற்படலாம்.

ஓசூர் சாலையில் உள்ள பி.டி.எம்., லே - அவுட் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள ராமலிங்க ரெட்டிக்கு, ஓசூர் சாலையில் அத்திப்பள்ளி எல்லை வரை செல்வாக்கு உள்ளது.

முன்னாள் கவுன்சிலர்கள், மேயர்கள் கூட அவரது ஆதரவாளர்கள் தான். இதை எல்லாம் காங்கிரஸ் கருத்தில் கொள்ள வேண்டும் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஜி.பி.ஏ., தேர்தலில் வெற்றி பெறுவதில் தான் சிவகுமாரின் கவுரவமும் அடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us