தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சட்டவிரோத மதரசா குறித்து வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சட்டவிரோத மதரசா குறித்து வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சட்டவிரோத மதரசா குறித்து வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


UPDATED : நவ 24, 2026 12:00 AM

ADDED : நவ 23, 2026 07:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 12:00 AM ADDED : நவ 23, 2026 07:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: தனிச்சந்திராவில் சட்டவிரோதமாக மதரசா நடத்தப்படுவது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரின் தனிச்சந்திராவில், ‘அல் ஜாமியா முகமதிய எஜுகேஷன் டிரஸ்ட்’ சார்பில், மதரசா மற்றும் பள்ளி நடத்தப்படுகிறது.

இது சட்டவிரோதமாக செயல்படுகிறது. இது குறித்து, மஹாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அந்த டிரஸ்ட் கூறுகிறது. ஆனால் அதற்கான எந்த ஆவணங்களும் இல்லை.

இதே காரணத்தால், கடந்த 2025 மே 30ம் தேதி, மதரசா மற்றும் பள்ளியின் அங்கீகாரத்தை கல்வித்துறை ரத்து செய்தது.

ஆயினும், பள்ளியும், மதரசாவும் இன்றும் செயல்படுகின்றன. இப்பள்ளியில் வட மாநிலங்களைச் சேர்ந்த சிறார்கள் அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

சட்டவிரோதமாக செயல்படும் பள்ளி மற்றும் மதரசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதியை திரும்ப பெற அரசுக்கு உத்தரவிடும்படி, சாந்த் பாஷா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், மனு குறித்து பதிலளிக்க மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us