/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் இந்திரா உணவகம் மே 29ம் தேதி திறப்பு: ரூபகலா
/
தங்கவயலில் இந்திரா உணவகம் மே 29ம் தேதி திறப்பு: ரூபகலா
தங்கவயலில் இந்திரா உணவகம் மே 29ம் தேதி திறப்பு: ரூபகலா
தங்கவயலில் இந்திரா உணவகம் மே 29ம் தேதி திறப்பு: ரூபகலா
ADDED : மே 22, 2025 11:14 PM

தங்கவயல்: ''தங்கவயலில் இந்திரா உணவகம் இம்மாதம் 29ல் திறக்கப்படும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில், பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் மலிவு விலையில் உணவு வழங்கும் இந்திரா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோலார் மாவட்டத்தில் பங்கார்பேட்டை, சீனிவாசப்பூர் நகரங்களிலும் இந்திரா உணவகம் நான்கு ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு காலை டிபன், மதியம், இரவு உணவு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள், தினக் கூலிகள், கட்டுமான ஊழியர்கள், என ஏழைகள், நடுத்தர மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
ஆயினும், தங்கவயலில் இந்திரா உணவகம் இல்லாததால் பலவித விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, ராபர்ட்சன் பேட்டை மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இந்திரா உணவக கட்டடம் கட்டத் தொடங்கினர். ஆமை வேகத்தில் இப்பணி நடந்தது.
இதேபோல, மாலுாரிலும் இந்திரா உணவகம் திறக்கப்படாமல் இருந்தது. மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, இம்மாதம் 28ம் தேதி இதன் திறப்பு விழாவை நடத்துவதாக அறிவித்துள்ளார்.
அதேபோல, தங்கவயல் ராபர்ட்சன் பேட்டையில் உள்ள இந்திரா உணவகம் இம்மாதம் 29ம் தேதி திறக்கப்படும் என்று தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா அறிவித்துள்ளார்.
இந்திரா உணவகத்தை நேற்று பார்வையிட்டார். கட்டுமான பணிகளை, விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார். அவருடன் நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, வார்டு கவுன்சிலர் வி.பிரவீன் குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.