UPDATED : அக் 11, 2026 12:00 AM
ADDED : அக் 10, 2026 09:54 PM
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகளான வினய், சந்தன்குமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷனை தப்ப வைக்க முயன்றதாகவும், ஒழுங்காக விசாரணை செய்யாத காமாட்சிபாளையா சப் – இன்ஸ்பெக்டர் வினய், ஏ.சி.பி., சந்தன்குமார் மீது சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா என்பவர், போலீஸ் டி.ஜி.பி., சலீமிடம் சமீபத்தில் முறையிட்டார்.
இவ்விஷயம் குறித்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம், புகார் அளிக்கும்படி டி.ஜி.பி., சலீம் அறிவுறுத்தினார். இதையடுத்து, சீமந்த்குமாரிடம், ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் அளித்தார்.
இவ்வழக்கில் விசாரணை அதிகாரிகளான வினய், சந்தன்குமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த நேற்று உத்தரவிடப்பட்டது.
