தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வட்டியின்றி குடிநீர் கட்டணம் செலுத்த அவகாசம்

 வட்டியின்றி குடிநீர் கட்டணம் செலுத்த அவகாசம்

 வட்டியின்றி குடிநீர் கட்டணம் செலுத்த அவகாசம்


ADDED : ஏப் 08, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தை, வட்டியின்றி செலுத்த வரும் ஜூன் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரில், 5.11 லட்சம் பேர் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். மொத்த நிலுவைத்தொகை 851.33 கோடி ரூபாய். இதில், அசல் தொகை 539.43 கோடி; வட்டி தொகை 311.90 கோடி ரூபாய்.

நிலுவை தொகையை வசூலிப்பதற்காக, ஓ.டி.எஸ்., என்ற ஒரு முறை தீர்வு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். இத்திட்டத்தின் மூலம், குடிநீர் கட்டணத்தை வட்டியின்றி செலுத்தலாம். நிலுவை தொகையில் முழு அசல் தொகையையும் செலுத்துவோர் வட்டி செலுத்த தேவையில்லை. 100 சதவீதம் வட்டி தள்ளுபடி வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us