/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில தலைமை செயலர் குறித்து அவதுாறு பா.ஜ., - எம்.எல்.சி., மீதான விசாரணைக்கு தடை
/
மாநில தலைமை செயலர் குறித்து அவதுாறு பா.ஜ., - எம்.எல்.சி., மீதான விசாரணைக்கு தடை
மாநில தலைமை செயலர் குறித்து அவதுாறு பா.ஜ., - எம்.எல்.சி., மீதான விசாரணைக்கு தடை
மாநில தலைமை செயலர் குறித்து அவதுாறு பா.ஜ., - எம்.எல்.சி., மீதான விசாரணைக்கு தடை
ADDED : ஜூலை 26, 2025 05:01 AM

பெங்களூரு: மாநில தலைமைச் செயலர் ஷாலினி குறித்து அவதுாறாக பேசிய பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், இம்மாதம் 1ம் தேதி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது, பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமார், 'கர்நாடக மாநில தலைமை செயலர் ஷாலினி குறித்து அவதுாறாக பேசியிருந்தார். இதற்கு பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
புகார் இது தொடர்பாக விதான் சவுதா போலீஸ் நிலையத்தில், சமூக ஆர்வலர் நாகரத்னா புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவிகுமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நேற்று நடந்த விவாதத்தின்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் அருண் ஷியாம் வாதிட்டதாவது:
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், என் மனுதாரர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஷாலினி குறித்து அவர் பேசியதை, ஊடகத்தில் விளக்கம் அளித்துவிட்டார். ஆனால் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பின், புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல.
இதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் அளித்த புகாருக்கு, போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. 'டிவியில் செய்தியை பார்த்த பின்னரே புகார் அளித்ததாக' புகார்தாரர் தெரிவித்துள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அளிக்கப்பட்ட புகாராகும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
கண் சிமிட்டல் அரசு தரப்பு வக்கீல் பெல்லியப்பா வாதிட்டதாவது:
ஒரு பெண்ணின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வார்த்தை, சைகை அல்லது செயல்கள் பி.என்.எஸ்., பிரிவு 79ன் கீழ் பொருந்தும். 'கண் சிமிட்டுவது கூட குற்றம்' என, உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
ஒரு பெண், நீதிமன்றத்தின் படி ஏறியிருப்பதால், அவரிடம் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றம் வர வேண்டிய அவசியம் இல்லை. எனவே, விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'வழக்கு மீதான விசாரணை, தொடர்ந்து வரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தடைக்கான காரணம் தனியாக தெரிவிக்கப்படும்' என்று கூறி ஒத்திவைத்தார்.