தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மகள்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க ஐ.பி.எஸ்., அதிகாரி ரூ.2 கோடி லஞ்சம்

மகள்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க ஐ.பி.எஸ்., அதிகாரி ரூ.2 கோடி லஞ்சம்

மகள்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க ஐ.பி.எஸ்., அதிகாரி ரூ.2 கோடி லஞ்சம்


UPDATED : நவ 26, 2026 12:06 AM

ADDED : நவ 26, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 12:06 AM ADDED : நவ 26, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஆட்சேர்ப்பு முறைகேடு வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், தன் இரு மகள்களுக்கு, கே.ஏ.எஸ்., எனும் கர்நாடக நிர்வாக சேவை பதவிக்காக, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது, அமலாக்க துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கே.பி.எஸ்.சி., நடப்பாண்டு ஜனவரியில் கால்நடை மருத்துவர் தேர்வு நடத்தியது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின்படி, எஸ்.ஐ.டி., மற்றும் ஈ.டி., எனும் அமலாக்க துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின், தேர்வு நடந்த போது, தேர்வு அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் கங்வார், இடைத்தரகர் பசவராஜ் கன்னிலே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின், கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர், உறுப்பினர் கீதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அமலாக்க துறை சிறப்பு நீதிமன்றத்தில், 8,400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்க துறையினர் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள பசவராஜ் கன்னலேவிடம், நேற்று முன்தினம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது பசவராஜ் கன்னிலே, கே.ஏ.எஸ்., நேர்காணல் அட்டவணை அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன், ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் இல்லத்தில் இருந்து பணத்தை எடுத்து வரும்படி, ஞானேந்திரகுமார் என்னிடம் கூறினார்.

நானும், ஐ.பி.எஸ்., அதிகாரியின் வீட்டுக்கு சென்று, இரண்டு கோடி ரூபாய் வசூலித்து, ஞானேந்திரகுமாரிடம் ஒப்படைத்தேன். அப்போது ஞானேந்திரகுமார், ‘ஐ.பி.எஸ்., அதிகாரி, தன் இரு மகள்கள் நேர்காணலில் அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதற்கான கொடுக்கப்பட்ட முன்பணம் இது. இதை சிவசங்கரப்பா சாகுகரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றார்.

‘அதன் பின், நடந்த தேர்வில், அவரின் ஒரு மகள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து ஐ.பி.எஸ்., அதிகாரியும், அவரது மனைவியும் என்னை வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்டனர்.

‘அத்துடன், 2023 முதல், பொதுப்பணி துறையில் இளநிலை பொறியாளர், வேளாண்மை அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்காக வசூலிக்கப்பட்ட தொகை உட்பட ஞானேந்திரகுமார், 12 முதல் 15 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளார்’ என்று கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us