தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரேஷன் கடை கைரேகை பதிவு மூத்த குடிமக்களுக்கு விலக்கு?

 ரேஷன் கடை கைரேகை பதிவு மூத்த குடிமக்களுக்கு விலக்கு?

 ரேஷன் கடை கைரேகை பதிவு மூத்த குடிமக்களுக்கு விலக்கு?


ADDED : செப் 16, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'அன்ன பாக்கியா' திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்வதில் கைரேகை சிக்கல்களை எதிர்கொண்ட மூத்த குடிமக்கள், கூலி தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு உணவு துறை விலக்கு அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ரேஷன் கடைகளில், முறைகேடுகளை தடுக்கும் வகையில், 'பயோமெட்ரிக் கைரேகை' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மூத்த குடிமக்கள், விவசாயிகள், கூலி தொழிலாளர்களான உழைக்கும் வர்க்கத்தினருக்கு இது சிரமத்தை ஏற்படுத்தியது.

முதியவர்களுக்கு வயது மூப்பு காரணமாகவும், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் நாள் முழுதும் பணியாற்றுவதால் கைரேகை தேய்ந்து விடுகிறது.

எனவே, ரேஷனில் உணவு பொருட்கள் வினியோக செயல்முறையை எளிதாக்க முடிவு செய்துள்ளது. இதன் படி மாநிலத்தில் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும், 2 சதவீத மூத்த குடிமக்கள், உழைக்கும் வர்க்கத்தினருக்கு கைரேகை வைப்பதில் விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. அத்துடன், ரேஷனில் உணவு பொருட்கள் வாங்கும் மூத்த குடிமக்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் பட்டியலை தயாரித்து வருகிறது.

முதியவர்கள், படுக்கையில் இருப்பவர்கள் அல்லது விரல் பிரச்னை உள்ளவர்களுக்கு அவர்களின் கருவிழிகளை பரிசோதித்து ரேஷன் வழங்கப்படுகிறது. உடல்நல குறைவு, பார்வை குறைபாடு அல்லது பிற காரணங்களால், கருவிழி பரிசோ தனை செய்ய முடியாத நேரத்தில், மிகவும் நலிவடைந்த பயனாளிகளுக்கு கைரேகை, கருவிழி பரிசோதனைகள் இரண்டில் இருந்தும் முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று, 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியிருந்தது. இதற்காக மொபைல் போனில் செயலி பதிவிறக்கம் செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. மொபைல் போன் இல்லாத மற்றும் தொழில்நுட்பம் குறித்து தெரியாத மூத்த குடிமக்களுக்கு இது பெரும் தலைவலியாக உள்ளது.

இதையடுத்து, இவர்களுக்கான செயலி பதிவிறக்கம் நடவடிக்கையை நீக்கி, ரேஷன் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

அரசின் இந்த முடிவு, மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மூத்த குடிமக்களுக்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும் நிம்மதியை அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us