/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறதா காங்., அரசு?
/
ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறதா காங்., அரசு?
ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறதா காங்., அரசு?
ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறதா காங்., அரசு?
ADDED : செப் 17, 2025 08:38 AM
கர்நாடகாவில் கடந்த 2013 முதல் 2018 வரை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. முதல்வராக இருந்த சித்தராமையா, அன்னபாக்யா, ஷாதிபாக்யா, சீரபாக்யா உட்பட பல திட்டங்களை கொண்டு வந்தார். இந்த திட்டங்களுக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது.
கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று, நிறைய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், காங்கிரசால் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. நிறைய திட்டங்களை கொண்டு வந்த போதிலும், காங்கிரஸ் எப்படி தோற்றது என்று கேள்வி எழுந்தது.
கொலை காங்கிரசின் தோல்விக்கு ஹிந்து விரோத கொள்கையே காரணமாக இருந்தது. சிறுபான்மையினர் ஓட்டுகளை கவரும் வகையில், சிறுபான்மையினர் சமூகத்திற்கு நிறைய நிதி ஒதுக்கினர். ஹிந்துக்களை கண்டுகொள்ளவில்லை. சில மாவட்டங்களில் ஹிந்து அமைப்பின் பிரமுகர்கள், தொண்டர்கள் கொலை செய்யப்பட்டனர்.
திப்பு சுல்தான் ஜெயந்தியை கொ ண்டாட எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்பினர் குடகில் நடத்திய போராட்டத்தில், போலீசார் நடத்திய துப் பாக்கி சூட்டில் இருவர் இறந்தனர். பெங்களூரின் சிவாஜிநகரில் கடந்த 2016ல், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ருத்ரேஷ் கொல்லப்பட்டார். இதனால் காங்கிரசுக்கு, ஹிந்து விரோத அரசு என்ற முத்திரை குத்தப்பட்டதால் , தேர்தலில் தோற்க நேர்ந்தது.
கல்வீச்சு இந்நிலையில், 2023 தேர்தலில் வெற்றி பெற்ற பின், காங்கிரஸ் மீண்டும் தனது வேலையை காட்ட ஆரம்பித்து உள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக கோடிக்கணக்கில், அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், ஹிந்துக்களுக்காக குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மாண்டியாவின் கெரேகோடுவில் ஹனுமன் கொடியை அகற்றியது; நாகமங்களாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தின் போது, விநாயகர் சிலை போலீஸ் ஜீப்பில் எடுத்து சென்று கரைத்தது; சில தினங்களுக்கு முன் மத்துாரில், விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசப்பட்டது;
ஹூப்பள்ளியில் நடந்த கலவரம் உட்பட பல காரணங்களால், ஹிந்து விரோத அரசு என்ற பெயரை, காங்கிரஸ் அரசு இப்போதே எடுத்து உள்ளது. அரசின் ஆட்சி காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், வரும் நாட்களில் சிறுபான்மையினரை திருப்திபடுத்த, தங்களை என்னென்ன செய்ய போகின்றனரோ என்ற பயம், ஹிந்துக்களுக்கு இப்போது இருந்தே ஏற்பட்டு உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளும், ஹிந்துக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டால், 2028 தேர்தலில் காங்கிரஸ் நிலைமை அதோ கதி ஆகும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.
- நமது நிருபர் -