/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் பதவி பெற காங்., மேலிடத்திற்கு ரூ.300 கோடி 'கப்பம்' கட்ட எம்.எல்.ஏ., திட்டம்?
/
அமைச்சர் பதவி பெற காங்., மேலிடத்திற்கு ரூ.300 கோடி 'கப்பம்' கட்ட எம்.எல்.ஏ., திட்டம்?
அமைச்சர் பதவி பெற காங்., மேலிடத்திற்கு ரூ.300 கோடி 'கப்பம்' கட்ட எம்.எல்.ஏ., திட்டம்?
அமைச்சர் பதவி பெற காங்., மேலிடத்திற்கு ரூ.300 கோடி 'கப்பம்' கட்ட எம்.எல்.ஏ., திட்டம்?
ADDED : அக் 11, 2025 05:10 AM

பெங்களூரு: பீஹார் தேர்தலுக்கு செலவு செய்வதற்காக, காங்கிரஸ் மேலிடத்திற்கு 300 கோடி ரூபாய் கொடுத்து, முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் இடம்பிடிக்க வீரேந்திர பப்பி திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, 50. தன் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சட்டவிரோதமாக 'பெட்டிங்' நடத்தியதுடன், அதில் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது.
சொந்த பணம் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் வீரேந்திர பப்பியை கைது செய்தது. தற்போது சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை 21 கிலோ தங்கக்கட்டிகள், தங்கம், வெள்ளி நகைகள் என, 103 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், வாகனங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது.
நேற்று முன்தினம் வீரேந்திர பப்பிக்கு சொந்தமான இடத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், மேலும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இளம்வயதிலேயே கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள, வீரேந்திர பப்பி பரம்பரை பணக்காரர் கூட இல்லை. சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
பி.காம் பட்டதாரியான அவர், முதலில் சிறிய தொகையில் பணம் கட்டி, சூதாட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த தொழிலின் ரகசியம் தெரிந்ததும், கோவா, வெளிநாடுகளில் 'பெட்டிங்' நடத்தி சம்பாதிக்க ஆரம்பித்தார்.
முன்பு ம.ஜ.த., கட்சியில் இருந்த வீரேந்திர பப்பி, 2018 தேர்தலில் சித்ரதுர்கா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அவருக்கு வலைவிரித்து காங்கிரஸ் தன் பக்கம் இழுத்துக் கொண்டது. 2023 தேர்தல் பிரசாரத்தின்போது, 'நான் வெற்றி பெற்றால், அரசிடம் இருந்து தான் நிதி வாங்கி, தொகுதிக்கு வேலை செய்ய வேண்டும் என்று இல்லை; என் சொந்த பணத்தில் பணிகள் செய்ய தயார்' என்றே கூறி வெற்றி பெற்றார்.
பீஹார் தேர்தல் இந்நிலையில், வீரேந்திர பப்பி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது எதற்காக என்பது பற்றி, தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. முதன்முறை எம்.எல்.ஏ., ஆன அவருக்கு, அமைச்சர் பதவி மீது ஆசை இருந்துள்ளது. 'பீஹார் தேர்தலுக்கு செலவுக்கு 300 கோடி ரூபாய் நான் கொடுக்கிறேன்; எனக்கு அமைச்சர் பதவி வேண்டும்' என, கட்சி மேலிடத்திடம், வீரேந்திர பப்பி 'டீலிங்' பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு மேலிடமும் ஒப்புக்கொண்டதால், அதற்கான பணத்தை வீரேந்திர பப்பி தீவிரமாக திரட்டி வந்துள்ளார்.
கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கு மேல் அவர் திரட்டிய நிலையில், அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.
ஒருவேளை அவர் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால், இந்நேரத்திற்கு 300 கோடி ரூபாய், காங்கிரஸ் மேலிடத்திற்கு சென்றிருக்கும் என்று கூறப்படுகிறது.