sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நிலத்தடியில் தங்கம் இருக்கிறதா? ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

 நிலத்தடியில் தங்கம் இருக்கிறதா? ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

 நிலத்தடியில் தங்கம் இருக்கிறதா? ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு


UPDATED : பிப் 03, 2026 06:16 AM

ADDED : பிப் 03, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2026 06:16 AM ADDED : பிப் 03, 2026 06:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: சிக் கபல்லாபூரில் நிலத்தடியில் தங்கம் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.

சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் பாகேபள்ளி, குடிபண்டே தாலுகாக்களில் உள்ள சில இடங்களில் தங்கத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, இந்திய புவியியல் ஆய்வு மையம், சிக்கபல்லாபூரில் தங்கம், கனிம வளங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிவதற்கு ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு, ஹெலிகாப்டர் வழியாக ரேடார் உதவியுடன் வான் வழியில் நடக்கிறது. ஹெலிகாப்டரில் பெரிய வளையம் போன்ற பொருள் இணைக்கப்பட்டு, ஹெலிகாப்டர் தரைமட்டத்தில் இருந்து சிறிது துாரம் மேல்நோக்கி பறக்கிறது. இதன் மூலம், நிலத்தில் தங்கம் இருக்கிறதா என்ற ஆய்வு நடத்தப்பட்டது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் பிரபு கூறியதாவது:

சிக்கபல்லாபூரில் 2019 -- - 2020ம் ஆண்டுகளில் கணக்கெடுப்பு நடந்தது. இதன் அடிப்படையிலே தங்கம் இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் புவியியல் தகவல் அமைப்பு பிரிவு மற்றும் தொலைதுார உணர்திறன் பிரிவு ஆகியவற்றால் கணக்கெடுப்பு நடக்கிறது.

இப்பணிகள் வரும் மே 31 வரை நடக்கும். ஹெலிகாப்டர் அருகே பறப்பதை கண்டு யாரும் அச்சம் அடைய வேண்டாம். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us