/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிறைவு தருவாயில் 'ககன்யான்' பணி 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேட்டி
/
நிறைவு தருவாயில் 'ககன்யான்' பணி 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேட்டி
நிறைவு தருவாயில் 'ககன்யான்' பணி 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேட்டி
நிறைவு தருவாயில் 'ககன்யான்' பணி 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேட்டி
ADDED : அக் 23, 2025 11:15 PM

பெங்களூரு: 'ககன்யான்' திட்ட பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளதாக, பெங்களூரில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் நாராயணன் நேற்று அளித்த பேட்டி:
டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை, இஸ்ரோ சார்பில் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார்.
ககன்யான், சந்திரயான் உள்ளிட்ட திட்டங்கள், இஸ்ரோவின் சாதனை மட்டுமின்றி, இந்தியாவின் அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பின் கூட்டு வலிமையை பிரதிபலிக்கிறது. 'ககன்யான்' பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. துணை அமைப்பு அளவிலான செயல்பாடுகளில் 85 முதல் 90 சதவீதம் வரை இறுதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது ஒருங்கிணைந்த சோதனை, மென்பொருள் சரிபார்ப்பு நடத்துகிறோம். முழு பாதுகாப்பு, அமைப்பு நம்பகத்தன்மையை உறுதி செய்ய, பணியாளர்கள் இல்லாத மூன்று பயணங்கள் துவங்கப்படும். ககன்யான் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பற்றி 2023ல் பிரதமர் மோடி அறிவித்தார்.
வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி நடக்கிறது. அமெரிக்காவுடன் கூட்டு முயற்சியாக 'ப்ளூபேர்ட் - 6' செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 6.50 டன் எடையுள்ள செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் ஏவப்படும்.
இதற்கான தேதியை பொருத்தமான நேரத்தில், பிரதமர் மோடி அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் ராஜராஜன் கூறுகையில், ''2040ம் ஆண்டுக்குள் சந்திரயானில் இந்தியரை தரையிறக்க உதவும் வகையில், நாங்கள் சந்திர தொகுதி ஏவுதள வாகனத்தை கட்டமைத்துள்ளோம். இது வடிவமைப்பு மற்றும் உள்ளமைவின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
''இந்த வாகனத்தின் உற்பத்தி திறனை அமைத்து அம்சத்திலும் பயன்படுத்த முயற்சித்து வருகிறோம். எந்தவொரு வாகன மேம்பாடும் சவாலானது. 2040ம் ஆண்டிற்குள் அனைத்தையும் உற்பத்தி செய்ய சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும்,'' என்றார்.

