'அஹிந்தா' என சித்தராமையா மிரட்டுவது வழக்கம்: விஸ்வநாத்
'அஹிந்தா' என சித்தராமையா மிரட்டுவது வழக்கம்: விஸ்வநாத்
ADDED : செப் 08, 2026 08:00 PM

மைசூரு: ''தனக்கு செல்வாக்கு இல்லாத காலங்களில் எல்லாம், 'அஹிந்தா' அமைப்பை பயன்படுத்தி, அதிகாரத்தை பெற்றவர் சித்தராமையா. ஆனால், அந்த அமைப்புக்கு அவரால் எந்த பயனும் இல்லை,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சித்தராமையாவுக்கு, செல்வாக்கு இல்லாத நேரங்களில் எல்லாம் அஹிந்தா என்று முழங்குவார். அவர் முதல்வராக இருந்தபோது, அஹிந்தாவுக்கு எதுவும் செய்யவில்லை. அஹிந்தாவை கட்டி எழுப்பிய முக்கிய தலைவர்களை சித்தராமையா புறக்கணித்து உள்ளார்.
இப்போது பரமேஸ்வரை வைத்து, அஹிந்தா மாநாட்டை துவக்கி வைத்துள்ளார். முன்னதாக, முதல்வராகும் வாய்ப்பு பரமேஸ்வருக்கு கிடைத்தபோது, அவர் தோற்க காரணமாக இருந்தவர் சித்தராமையா.
மைசூரில் மஹாதேவப்பா, தன்வீர் செய்ட், பிரியாபட்டணா வெங்கடேஷ் என மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பதவி தர மறுத்த சித்தராமையா, தனது மகன் யதீந்திராவுக்கு அமைச்சர் பதவி பெற்று தந்து உள்ளார். இது தான் அவரின் நோக்கம்.
பைரதி சுரேஷ் குறித்து அவதுாறாக பேசியதாகவும், அதற்கு நஷ்டஈடாக, 50 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதை சட்டப்படி எதிர்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
