/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தைகளுக்கு 'சிரப்' கொடுக்க தடை
/
குழந்தைகளுக்கு 'சிரப்' கொடுக்க தடை
ADDED : அக் 04, 2025 11:07 PM
பெங்களூரு: “டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல், குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்காதீர்கள்,” என, குழந்தைகள் நல வல்லுநர் எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் குழந்தைகள் வல்லுநர் லட்சுமிபதி கூறியதாவது:
குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்கும் விஷயத்தில், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல், இருமல் சிரப்பை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து, 11 குழந்தைகள் இறந்தன. மத்திய அரசும் இதுகுறித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல், இருமல் சிரப் கொடுப்பதால், குழந்தைகளின் சிறுநீரகம், மூளைக்கு பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.