/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரை புகழ்ந்த இத்தாலி பெண்
/
பெங்களூரை புகழ்ந்த இத்தாலி பெண்
ADDED : நவ 16, 2025 10:59 PM

பெங்களூரு: பெங்களூரை புகழ்ந்து தள்ளிய இத்தாலி பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இத்தாலியை சேர்ந்தவர் ஷெரினா, 32. இவர், பெங்களூரில் பத்து ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் இத்தாலி மொழியை கற்று கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, தனது அன்றாட வாழ்க்கை குறித்து 'இன்ஸ்டாகிராமில்' வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ, இணையத்தில் அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.
வீடியோவில், 'எனது ஹெல்மெட்டை மறந்து பைக்கிலே வைத்து விட்டு வந்துவிட்டேன். பின், மீண்டும் பத்து நிமிடங்கள் கழித்து சென்ற பிறகும் கூட ஹெல்மெட் பைக்கிலே இருந்தது. என்னுடைய ஹெல்மெட்டை யாரும் திருடவில்லை. இதுவே இத்தாலியாக இருந்தால் இரண்டு நிமிடங்களிலே ஹெல்மெட் திருட்டு போயிருக்கும். இந்தியா சிறந்த நாடு. பெங்களூரு சிறந்த நகரம். இங்கு நல்ல வானிலை மட்டுமின்றி பல நல்ல மனிதர்களும் வசிக்கின்றனர்' என கூறியிருந்தார்.
இதை பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

