பெங்களூரு மெட்ரோ நிர்வாக இயக்குநராக ஜாபர் நியமனம்
பெங்களூரு மெட்ரோ நிர்வாக இயக்குநராக ஜாபர் நியமனம்
ADDED : ஆக 05, 2026 11:11 PM
பெங்களூரு: பி.எம்.ஆர்.சி.எல்., - எம்.டி.,யாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகா ரி பி.சி.ஜாப ர் நி யமிக்கப்பட்டுள்ளார்.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நிதி துறையில் பட்ஜெட் மற்று ம் வளங்கள் துறை செயலராக பணியாற்றிய பி.சி.ஜாபர், பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக கழக, நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரேஜு, நிதித்துறையில் பட்ஜெட் மற்றும் வளங்கள் துறை செயலராக நியமனமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த குமார், வீட்டு வசதி துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மெட்ரோ ரயில் சேவை பெரும் பங்களிப்பு அளிக்கிறது. ரயில்கள் இயக்கம், புதிய பாதைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாக கழகம் செய்கிறது.
இத்தகைய கழகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜாபரிடம் அரசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர், 2003ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார்.
