தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/உடுப்பியில் உள்ள ஜோம்லு தீர்த்தம் நீர்வீழ்ச்சி

உடுப்பியில் உள்ள ஜோம்லு தீர்த்தம் நீர்வீழ்ச்சி

உடுப்பியில் உள்ள ஜோம்லு தீர்த்தம் நீர்வீழ்ச்சி


ADDED : மார் 12, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

: உடுப்பி மாவட்டம்: இது, சீதா நதியில் இருந்து உருவான இரண்டாவது நீர்வீழ்ச்சியாகும். முதல் நீர்வீழ்ச்சி ஹாசனில் கூட்லு தீர்த்தம் நீர்வீழ்ச்சியாக அமைந்து உள்ளது.

உடுப்பி நகரில் இருந்து 40 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, இயற்கை அழகின் மத்தியில் அமைந்து உள்ளது. குளிர்ந்த நீர், பறவைகளின் கீச்சொலி, அமைதியான சூழல், நீர்வீழ்ச்சியின் அழகை அதிகரிக்கிறது.

வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இங்கு வருகை தரலாம். இந்த நீர்வீழ்ச்சி உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும்.

இந்த நீர்வீழ்ச்சியை பார்த்ததும், உங்களுக்கு குளிக்க வேண்டும் என்று தோன்றும். அது அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில் மழை நாட்களில் நீரின் வேகம் அதிகமாக இருக்கும். நீர்வீழ்ச்சியில் குளிக்க இறங்கினால், அடித்து செல்லப்படுவீர்கள். எனவே மழை காலங்களில் இங்கு தண்ணீரில் இறங்காமல் இருப்பது நல்லது.

இந்த நதியின் கரையில், 'ஜோம்லு பாப்பையா' என்ற கோவில் உள்ளது. ஆண்டுதோறும் எள் அமாவாசையன்று இங்கு பக்தர்கள் புனித நீராட வருவர். நீர்வீழ்ச்சியில் இறங்க முடியாததால், கரையில் இருந்தபடி நீரை கையில் எடுத்து தலையில் தெளித்து கொள்வர்.

பக்தர்கள் வசதிக்காக, நீர்வீழ்ச்சியின் அருகிலேயே சிறிய இரும்பு பாலம் அமைத்து உள்ளனர். எள் அமாவாசையன்று, இதன் வழியாக இறங்கி செல்லும் பக்தர்கள், பத்திரமாக குளித்து விட்டு, மீண்டும் இதன் வழியாகவே மேலே வருகின்றனர்.

எனவே, நவம்பர் முதல் ஏப்ரல் மாதங்களில் இங்கு செல்வது நல்லது. இந்நேரத்தில் மழையும் இருக்காது, நீரின் ஓட்டமும் குறைவாக இருக்கும்.

அத்துடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளதால், உள்ளே கடைகள் எதுவும் இருக்காது. இங்கு செல்லும் முன்னர், சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி செல்வது சிறந்தது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us