/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆணவ கொலைகளை தடுக்க கடும் சட்டம் தேவை: முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் வலியுறுத்தல்
/
ஆணவ கொலைகளை தடுக்க கடும் சட்டம் தேவை: முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் வலியுறுத்தல்
ஆணவ கொலைகளை தடுக்க கடும் சட்டம் தேவை: முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் வலியுறுத்தல்
ஆணவ கொலைகளை தடுக்க கடும் சட்டம் தேவை: முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 27, 2025 06:30 AM
பெங்களூரு: 'மாநிலத்தில் நடக்கும் ஆணவ கொலைகளை கட்டுப்படுத்த, கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்' என, பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக, முதல்வர் சித்தராமையாவுக்கு அவர்கள் கடிதமும் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது:
ஹூப்பள்ளி தாலுகாவின் இனாம் வீராபுராவில் நடந்த ஆணவ கொலையை, நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஜாதி பயங்கரவாதத்துக்கு பலியான உயிருக்கு, நியாயம் கிடைக்க வேண்டும். ஹூப்பள்ளியில் ஆணவ கொலை செய்யப்பட்ட மான்யாவின் பெயரில் கடுமையான சட்டம் வகுக்க வேண்டும்.
மாநிலத்தில் ஆணவ கொலைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது, கவலைக்குரிய விஷயமாகும். ஜாதி வேற்றுமை, தீண்டாமை போன்ற அவலங்களை ஒழிக்க, கலப்பு திருமணங்கள் நல்ல தீர்வு என, பசவண்ணர் மற்றும் அம்பேத்கர் அறிவுறுத்தினர்.
கலப்பு திருமணத்தை ஏற்க முடியாத, ஜாதிவாத மனப்போக்கு, அறிவியல் யுகத்திலும் தொடர்கிறது. இது, சமத்துவமான சமுதாயங்களை உருவாக்கும் முயற்சிக்கு, தடைக்கல்லாக உள்ளது. கலப்பு திருமணம் செய்து கொண்ட தங்களின் பிள்ளைகளை, பெற்றோரே சட்டம் குறித்த பயம் இல்லாமல் ஆணவ கொலை செய்கின்றனர். வரும் நாட்களில் ஜாதிவாதிகள், இத்தகைய அட்டூழியங்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது.
ஆணவ கொலை என்ற அவலத்தை, வேரோடு அழிக்க அரசு ஆர்வம் காட்ட வேண்டும். ஜாதி பகைமையால், காதலர்கள் அல்லது தம்பதி மீது, அவர்களின் குடும்பத்தினரே தாக்குதல் நடத்துவது, கொலை செய்வது போன்ற குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.

