/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலையில் மயங்கி கிடந்த முதியவருக்கு நீதிபதி உதவி
/
சாலையில் மயங்கி கிடந்த முதியவருக்கு நீதிபதி உதவி
ADDED : ஜூன் 29, 2025 06:55 AM
தாவணகெரே : சாலை ஓரத்தில் மயங்கிக் கிடந்த முதியவரை, மருத்துவமனையில் சேர்த்து மனித நேயத்தை வெளிப்படுத்திய நீதிபதி வேலா, அனைவரையும் கவர்ந்தார்.
தாவணகெரே மாவட்டத்தின், ஹரிஹரா மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுபவர் வேலா. இவர் நேற்று மதியம், காரில் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
தொட்டபாத்தி அருகில், மந்தாரா பள்ளி அருகில் உள்ள பிரதான சாலையில், முதியவர் ஒருவர் சோர்வடைந்து, சாலை ஓரத்தில் விழுந்து கிடந்தார். இதை கண்ட நீதிபதி வேலா, உடனடியாக முதியவரை அழைத்துச் சென்று, ஹரிஹரா அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை அளிக்க செய்தார்.
முதியவரிடம் விசாரித்தபோது, ஹரப்பனஹள்ளி தாலுகாவின், தெலகி கிராமத்தை சேர்ந்த கரியப்பா என்பது தெரிந்தது. அவரை வீட்டில் அழைத்துச் சென்று விடவும் ஏற்பாடு செய்தார். நீதிபதியின் மனித நேயத்தை பலரும் பாராட்டினர்.