ADDED : ஆக 26, 2026 11:00 PM

- நமது நிருபர் -
அருவி என்றால், யாருக்கு தான் விருப்பம் இருக்காது. தற்போது மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அருவிகளில் நீர் பெருக்கெடுத்து பாய்கிறது. சுற்றுலா பயணியர் வருகையும் அதிகரித்துள்ளது. காமேனஹள்ளி அருவியும் சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது.
சிக்கமகளூரு மாவட்டத்தில், கல்லத்திகிரி, ஜரி, பண்டாஜே உட்பட, பல அருவிகள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஆனால் அடர்ந்த வனத்துக்குள் மறைந்துள்ள காமேனஹள்ளி அருவி, இன்னும் அவ்வளவாக வெளிச்சத்துக்கு வரவில்லை.
இ தை டைமண்ட் அருவி, தபேதபே அருவி என, அழைக்கின்றனர். டிரெக்கிங் செய்து கொண்டு, நண்பர்களுடன் பொழுதுபோக்க, காமேனஹள்ளி தகுந்த இடமாகும்.இங்கு செல்வது அவ்வளவு எளிதல்ல. அழகு இருக்கும் இடத்தில், ஆபத்து ம் இருக்கும். அழகான அருவியை பார்க்க, கரடுமுரடான பாதையில் நடந்து செல்ல வேண்டும்.
சிறிது கவனம் சிதறினாலும், பாறை மீது விழுந்து, அபாயத்தில் சிக்க நேரிடும். சிக்கமகளூரில் இருந்து, மல்லேனஹள்ளி வழியாக, 30 கி.மீ., சென்றால் காமேனஹள்ளியை அடையலாம். இங்கிருந்து அருவிக்கு எப்படி செல்வது என, தேட வேண்டியது இல்லை. பேரிறைச்சலுடன் பாயும் தண்ணீரின் சத்தமே, சுற்றுலா பயணியருக்கு வழி காட்டி, அழைத்து செல்லும்.
கார் அல்லது பைக்கை நிறுத்தி விட்டு, 1.5 கி.மீ., துாரம் நடந்து சென்றால், இயற்கை எழில் கொஞ்சும், புதிய உலகத்தை காணலாம். 60 முதல் 7 0 அடி உ யரத்தில் இருந்து பாயும் அருவியை காணலாம்.
இங்குள்ள சில பாறைகள் வைர வடிவத்தில் உள்ளன. இதனால் டைமண்ட் அருவி என, அழைக்கின்றனர். வேகமாக பாயும் தண்ணீர் பாறையின் வடிவத்தை, வெவ்வேறு விதமாக மாற்றியுள்ளது.
காமே னஹள்ளி அருவி, மிகவும் அமைதியான சூழ்நிலையில் உள்ளது. சிறிது நேரம் இங்கு பொழுது போக்கி னால், மனம் லேசாகும். அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். சிக்கமகளூருக்கு வருவோர், இந்த அருவியை காண தவறாதீர்கள். ஆ னால் இங்கு செல்ல தி டமான மனம் வேண்டும். பாறைகள் வழுக்கும்.
எப்படி செல்வது?
காமேனஹள்ளி அருவிக்கு செல்ல, இரண்டு வழிகள் உள்ளன. சிக்கமகளூரு நகரில் இருந்து, மல்லேன வழியாகவோ அல்லது குமாரகிரி வழியாகவோ சென்றால், அருவியை அடையலாம். கடூரு வழியாக வரும் சுற்றுலா பயணியர், சகராயப்பட்டணா மூலமாக, இந்த அருவியை அடையலாம். அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கமகளூருக்கு, அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் ஏராளம்.
அனுமதி நேரம்: காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: பாபாபுடன்கிரி மலை, மாணிக்கதாரா அருவி, முல்லைய்யன கிரி, ஜரி அருவி, இனாம் தத்தாத்ரேய பீடம்.
