/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்னட ராஜ்யோத்சவா இன்று கொண்டாட்டம்
/
கன்னட ராஜ்யோத்சவா இன்று கொண்டாட்டம்
ADDED : நவ 01, 2025 04:25 AM
பெங்களூரு: கர்நாடகாவில் 70வது கன்னட ராஜ்யோத்சவா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
மைசூரு மாகாணம் கர்நாடக மாநிலமாக உதயமான நாள், கன்னட ராஜ்யோத்சவாவாக ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
விதான் சவுதாவில் நடக்கும் ராஜ்யோத்சவா நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்கின்றனர். அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் ராஜ்யோத்சவா கொண்டாட எம்.இ.எஸ்., எனும் மராட்டிய ஏகி கிரண் அமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பதால், அம்மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

