/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அத்திப்பள்ளியில் நாளை கன்னட ராஜ்யோத்சவா
/
அத்திப்பள்ளியில் நாளை கன்னட ராஜ்யோத்சவா
ADDED : டிச 12, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்ஜாபூர்: காடிநாடு கன்னட யுவசேனா சார்பில், அத்திப்பள்ளியில் நாளை கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு ரூரல் அத்திப்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் துவக்க பள்ளி வளாகத்தில் காடிநாடு கன்னட யுவ சேனா சார்பில், கன்னட ராஜ்யோத்சவா நாளை கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், மளிகை பொருட்கள் தொகுப்பு, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், முதியோருக்கு போர்வை விநியோகம் செய்யப்படுகிறது. அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தலைவர் நாகராஜ், வசந்த் குமார், ரவி, ரவிகிரண், மஞ்சுநாத், முனிகிருஷ்ணா, சீனிவாஸ் வினோத் உள்ளிட்டோர் செய்து உள்ளனர்.

